தேசிய கண்காட்சி ஆரம்ப நிகழ்வு முற்றவெளியில் ஆரம்பமாகியது .
இந்த ஆரம்ப நிகழ்வினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இன்று (சனிக்கிழமை) மாலை தொடக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், யாழ்.மேயர் அர்னோல்ட், மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
21ஆம் நூற்றாண்டின் இளைஞர்களுக்கு இந்த கண்காட்சி புதிய வணிக அறிவு மற்றும் நிதி வசதிகளைப் பெற உதவும் வழிகாட்டுகிறது.
9 வலயங்களின் கீழ் இன்றிலிருந்து வரும் 10 ஆம் திகதி வரையில் காலை 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரையில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் அரச மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த சுமார் 450 கண்காட்சி கூடங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலமாக பயன்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.