அளவில் இனங்காணப்பட்ட சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை காரணமாக அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத் தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “அண்மையில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் சம்பந்தமாக பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருந்த நேரத்தில் இலங்கையிலிருந்தும் நாம் கண்டனங்களை பதிவு செய்திருந்தோம்.
கடந்த வாரம் நான் நியூயோர்க்கில் ஒரு சில சந்திப்புக்களின் போதும் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பாக எவ்வளவு காலம் மௌனமாக இருக்கப் போகின்றீர்கள் என கேள்வியெழுப்பினேன். இதே கேள்வி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் அங்கு வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில் ஐ.நா. அமைதிப் படையில் இருந்து இலங்கை இராணுவத்தினரை விலக்கிக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அத்துடன் கீர்த்தி பெற்ற சிறப்பான இராணுவம் என்று கூறுவதற்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது.
இவ்வாறிருக்கையில் சர்வதேசம் எமது பிரச்சினையை கண்டுகொள்ளாமல் உள்ளது என்றும் கூறமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.