அமைவாக அடுத்துவரும் ஜனாதிபதியிடமிருந்து அமைச்சுக்கள் மட்டுமே இல்லாது போயுள்ளதாகவும், எனினும் அரசாங்கத்தின் தலைவராக அவரே தொடர்ந்துக் காணப்படுவார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில், இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக, தற்போதுள்ள ஜனாதிபதிக்கும் அடுத்த ஜனாதிபதிக்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
ஜனாதிபதிக்கான அதிகாரங்களை எடுத்துக்கொண்டால், அடுத்து ஆட்சிபீடமேறும் ஜனாதிபதிக்கு அமைச்சரவைகள் வழங்கப்படாது. பாதுகாப்பு அமைச்சுக்கூட அவரின் கீழ் இருக்காது. அமைச்சுக்கள் இல்லாது போனால், அவருக்குக் கீழ் எந்தவொரு திணைக்களங்களும் இருக்காது.
அந்தளவுக்கு அவருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும், ஏனைய அதிகாரங்கள் அவருக்கு அப்படியே தான் இருக்கும்.
உதாரணமாக, ஜனாதிபதி தான் அரசாங்கத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுவார். அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பது, அகற்றுவது போன்ற அதிகாரங்கள் அவரிடம் இருக்கும். அத்தோடு, முப்படைகளின் தளபதியாகவும் ஜனாதிபதிதான் தொடர்ந்து இருப்பார். இவற்றில் எந்தவொரு மாற்றங்களும் நிகழப்போவதில்லை” என்று குறிப்பிட்டார்.