தாக்கி பெண்னொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இயற்கை வளங்கள் மற்றும் வனவளத்துறை அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவின் எல்லையுடன் அமைந்துள்ள ரெட் பைன் தீவுப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாய்களைப் பார்வையிடச் சென்ற மகள் வீடு திரும்பாததை அடுத்து அவரது பெற்றோர் தமக்கு முறைப்பாடு வழங்கியதாகவும், தாம் சம்பவ இடத்திற்கு சென்று தேடிய போது குறித்த அந்தப் பெண் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாகவும்'”தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த நாய்களில் ஒன்றும் காயங்களுடன் காணப்பட்டதாகவும், இந்த தேடுதலின் போது பொலிஸாரும் மூன்று கரடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அவற்றுள் ஒன்று பொலிஸாரிடம் மூர்க்கத்தன நடந்துக் கொண்டதால், அது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.