பிரதமர் ஜஸ்டின் ருடோவின் முடிவுக்கு ஆளுநர் ஜெனரல் ஜூலி பயேட் அனுமதி வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம்(புதன்கிழமை) அவர் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ருடோ, ஆளுநர் ஜெனரல் ஜூலி பயேட்வினை நேற்று சந்தித்து நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரை செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கனேடிய பிரதமரின் முடிவுக்கு ஆளுநர் ஜெனரல் ஜூலி பயேட் ஒப்புதல் அளித்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் இதுகுறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள கனேடிய பிரதமர்,
‘இந்தத் தேர்தல் கனேடியர்களுக்கு அவர்கள் வாழ விரும்பும் கனடாவுக்கு வாக்களிக்க ஒரு வாய்ப்பை வழங்கும்’ என கூறியுள்ளார்