சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், கைது செய்யப்பட்டவர்ளின் பெயர் மற்றும் வயது உள்ளிட்ட விடயங்களை வெளியிடவில்லை.
160 வீதி மற்றும் 16 அவென்யூவுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிலேயே, குறித்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
குறித்த பகுதிக்கு பொலிஸார் விரைந்த போது, 46 வயதான ஆணொருவர் படுகாயங்களுடன் இருந்தாகவும். அவரை காப்பாற்ற முயன்ற போது, அவர் உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றும், பொதுமக்கள் பாதுகாப்புக்கு இதனால் ஆபத்து இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த மனிதக்கொலை விசாரணைக் குழு, தற்போது இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.