ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் கொழும்பு துறைமுக நகரத்தையும் புதிய களனி பாலத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.
குறித்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்தபோது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம் இன்றும் பயன்படுத்தி வருகின்றோம்.
எனினும் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதாரத்திலும், வீதிப்போக்குவரத்துக் கட்டமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதனடிப்படையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரநிலையமாக இலங்கையை வலுப்படுத்திக் கொள்வதையும், கொழும்பை அழகானதும் பொருளாதார வர்த்தக மையமாக உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்” என பிரதமர் தெரிவித்தார்.