மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான விசேட சந்திப்பொன்று ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுக்கும் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள், சிவில் அமைப்புக்கள், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் ஆகியன தயாராகி வருகின்றன.
இதேவேளை 12 அரசியல் கட்சிகள், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளன.
இம்முறை தேர்தல், முன்னைய ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்க போட்டித் தன்மை கொண்டதாக இருக்கும் என்று பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 19 குழுக்கள் கலந்து கொண்டதுடன் பிரதான 2 கட்சிகளைத் தவிர்ந்த ஏனைய 17 குழுக்கள் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.