சென்ரரில் இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு 11:30 மணிக்குப் பின்னர் வாகனத்தில் வந்த ஒருவர் ஈட்டன் சென்ரர் வடகிழக்கு மூலையை அணுகி H&M கடைக்கு அருகே பல முறை துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு கட்டடத்தின் சேதமடைந்த பகுதியை பார்வையிட்டனர்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நேரத்தில் குறித்த பகுதி நடைபாதையில் பொதுமக்கள் பலர் இருந்தபோதும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.