மின்சார பேருந்துகள் மெற்ரோ வன்கூவரில் உள்ள வீதிகளில் சேவைகளில் ஈடுப்பட்டுள்ளன.
மாசை ஏற்படுத்தும், புகையை குறைக்கும் ஒரு திட்டமாக குறித்த பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பேருந்துக்கள் பர்னாபி மற்றும் நியூ வெஸ்ற்மின்ஸ்ரர் ஆகிய இடங்களில் பயணிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.
மேலும், இதுபோன்ற ஆறு பேருந்துகள்; கொண்டு வரப்படுமென என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வன்கூவரில் ஏராளமான மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதால், மின்சார பேருந்துகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
டிரான்ஸ்லிங்கின் கூற்றுப்படி, ஒவ்வொரு பேருந்தும் 100 டன் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் எனவும், வழக்கமான டீசல் பேருந்துடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு, 40,000 அமெரிக்க டொலர்கள் எரிபொருள் செலவு சேமிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.