பொருளை புதைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பருத்தித்துறை அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் மாவட்ட போதைத் தடுப்புப் பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.
உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் 36 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் நிலமட்டத்துக்கு மணல் போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது. அதனை புதைத்து பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த வீட்டின் உரிமையாளரான 44 வயதுடைய குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் கூறினர்