விபத்துக்குள்ளானதில், ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளன் எரின் ட்ரைவுக்கு கிழக்கே, கவுன்சில் றிங் வீதி மற்றும் ஆஷ் றோ வீதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வாகனம் மரத்தின் மீது வேகமாக மோதுண்டு பலத்த சேதமடைந்துள்ள நிலையில். இந்த விபத்தில் படுகாயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாகனத்தின் சாரதி, உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோதலைத் தொடர்ந்து வாகனம் தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் போது குறித்த அந்த வாகனத்தில் ஒருவர் மட்டுமே இருந்துள்ளதாக தெரிவித்துள்ள பீல் பிராந்திய பொலிஸார் விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.