இணைய சேவையை வழங்குவதற்கு சீனாவின் ஹூவாவே நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும், சீனாவின் இந்த முயற்சியை கனடாவின் பல தரப்பினர் ஒரு ‘ட்ரோஜன் குதிரை’ சதித்திட்டமாக இருக்கக்கூடும் என்று கவலைவெளியிட்டுள்ளனர்.
குறித்த அதிவேக இணைய சேவை திட்டம் ஆர்க்ரிக் வலயத்தில் நிலைநிறுத்தப்படும் ‘சுப்பர் பவர்’ விமானங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்மூலமாக கனடாவின் வட பிராந்தியத்திற்கான அதிவேக இணைய சேவை தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று சீனாவின் ஹூவாவே நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆர்க்ரிக் வலயத்தில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள நகரப்பகுதிகளில் வசிக்கும் 7,500 பேரும் இந்த சேவையின் ஊடாக பயன்பெறுவர்.
கனேடிய அரசாங்கத்தின் தகவல்படி சுமார் 5.4 மில்லியன் மக்கள் அல்லது மொத்த சனத்தொகையில் 15 சதவீதமானோர் அதிவேக இணைய சேவையை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை.
அவர்களில் பெரும்பாலானவர்கள் கனடாவின் வட பிராந்தியத்திலும், தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.