இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
யோங் வீதி மற்றும் எர்ஸ்கைன் அவென்யூவில், சீமெந்துக் கலவையைச் சுமந்துசெல்லும் கனரக வாகனம் மோதியதில் 54 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த அந்தப் பகுதியில் யோங் வீதியைக் கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்து திரும்பிய கனரக வாகனம் பெண் மீது மோதியுள்ளது. மோதுண்ட பெண் வாகனத்தினுள் சிக்குண்டு சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த வாகனத்தில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததா என்று ஆராயப்படுவதாகவும், இந்தச் சம்பவத்தினால் அதிர்ச்சியுற்ற வாகனத்தின் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார், தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும், சாரதி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது தற்போதைக்கு தெரியவில்லை என்றும் பொலிஸார், குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் இருந்தால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்