ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தினால் போதும் என ரயில்வே பணியகம் அறிவித்துள்ளமைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் பெரும் மொழிப்போருக்கான களத்தை உருவாக்க வேண்டாம் என இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில், “ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் நடத்தினால் போதும் என ரயில்வே பணியகம் அறிவித்துள்ளது.
அத்துடன் கேள்வித்தாள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என உரிமை கோர முடியாது என்ற அறிவிப்பும் கண்டிக்கத்தக்கது.
தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே பணியகம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களத்தை மீண்டும் அமைக்க வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.