கடந்த வருடம்( 2018) மகுடம் பதிப்பகத்தின் 18 வது வெளியீடாக வெளிவந்த ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் "உதிர்தலில்லைஇனி" சிறுகதைத் தொகுதிக்கு 2018 ம் ஆண்டுக்கான "கொடகே "விருது கிடைக்கப்பெற்றுள்ளது.கடந்த 5ம் திகதி நடைபெற்ற கொடகே விருது விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
கடந்த வருடம் மகுடம் வெளியீடாக வெளிவந்த ஆறு நூல்களில்(மூன்று சிறுகதை தொகுப்புகள் மூன்று கவிதைத் தொகுப்புகள்) இரண்டு சிறுகதை நூல்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரஞ்சனி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்