மேம்படுத்துவது குறித்து இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி சூ ஜியான்வெல் மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் கலந்துரையாடியுள்ளார்.
இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்தும் விடயம் தொடர்பாகவும், பயிற்சி நெறிகள் தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது சீன பாதுகாப்பு இணைப்பதிகாரியினால் முன் வைக்கப்பட்ட புரிந்துணர்விற்கும், ஒத்துழைப்பிற்கும் தனது நன்றிகளை தெரிவித்த இராணுவ தளபதி சீன இராணுவத்துடன் உறவு முறையை மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
இறுதியில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இவர்கள் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு இணைப்பதிகாரியும் இணைந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.