அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியை தேர்தர்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி வரை அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாவட் செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளை எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும்போது சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மஹிந்த தேசப்பிரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.