அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சமீபகாலமாக நம்மை சீண்டிப் பார்ப்பவர்களை நாம் ஏதும் செய்யாமல் இருந்து வருகிறோம்.
ஆனால், யாராவது நம்மை தாக்கினால் அவர்கள் தங்களது வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுவதும் மறக்க முடியாதவாறு சரியான பதிலடி கொடுக்கப்படும். நம்மை சீண்டிப் பார்ப்பவர்கள் உற்பட அனைவரும் இதை புரிந்துக் கொள்ள வேண்டும் ”என எச்சரித்துள்ளார்.
இந்தியா போர் விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அவர் இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.