சின்னம். அதனை மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த யாப்பா மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டிலுள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உறுதிபூண்டுள்ள கட்சி பொதுஜன பெரமுனவாகும்.
அந்தவகையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாரிய வெற்றியை தாமரை சின்னத்தின் ஊடாகவே பெற்றோம்.
எனவே, எந்ததொரு சூழ்நிலையிலும் மொட்டு சின்னத்தை மாற்றுவதற்கு அனுமதிக்கமாட்டோம்.
அத்துடன் தற்போதைய அரசாங்கம், நாட்டுக்கு எது அவசியம் என்று அறியாமல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றது.
ஆனால், எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு வலுவான திட்டத்தை முன்வைத்துள்ளார். இது நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும்.
மேலும், மக்களின் வாக்குகளை வெல்லுவதற்காக நடைமுறையில் சாத்தியமில்லாத திட்டங்கள் குறித்து வாக்குறுதிகளை வழங்க எமக்கு விருப்பமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுச் சின்னத்தின் கீழ் களமிறங்க பொதுஜன பெரமுனவினர் சம்மதம் தெரிவிக்காவிட்டால், கூட்டணி சாத்தியப்படாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்தே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், கட்சி சின்னத்தை மாற்றமுடியாதென தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.