முறையை இலாலதொழிப்பது அன்று முதல் இன்று வரை தான் பின்பற்றும் அரசியல் கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அதிகார ஒழிப்பிற்கு தடையாக இருந்தது நாடாளுமன்றமே என்றும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் அதற்காக முயற்சிப்பது வேடிக்கையான விடயம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாவலவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்டத்திற்கான மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதன் போது தெரிவிக்கையில், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்காக அண்மையில் கூட்டப்பட்ட அவசர அமைச்சரவைக் கூட்டமானது எனது தேவைக்காக கூட்டப்பட்டதாக பிரதமரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அந்த அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் தேவைக்கு அமையவே கூட்டப்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இலாலதொழிப்பது அன்று முதல் இன்று வரை நான் பின்பற்றும் அரசியல் கொள்கையாகும். ஆனால் இந்த அதிகார ஒழிப்பிற்கு தடையாக இருந்தது நான் அல்ல. அதற்கு நாடாளுமன்றமே தடையாக இருந்தது.
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் அதற்காக முயற்சிப்பது வேடிக்கையான விடயமாக உள்ளது.
இதேவேளை, புதிதாக எத்தனை அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றாலும் அக்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை ஏற்படும் என்பதை பொதுமக்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு வலுவான அரசியல் கட்சி. எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடுவதை விட அரசியல் கட்சியின் தரத்தை கருத்திற்கொள்ள வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சக்தியினூடாகவே ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்ய முடியும்.
அனைவரையும் அரவணைத்து நாடு தொடர்பாக சிந்திக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கும். அதன் ஆற்றலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. புதிதாக தோன்றியுள்ள அரசியல் கட்சிகளை விட வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஊழல், இலஞ்சம், சந்தர்ப்பவாதம், குடும்ப அரசியல் போன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாத கட்சியாகும்” என்று தெரிவித்தார்.