கான் திருவனந்தபுரத்தில் தனது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிரிஷிகேஷ் ராய் அவருக்கு இன்று (வெள்ளிக்கிழமை)பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் இடம் பெற்ற ஆரிப் முகமது கான், முஸ்லிம் பெண்ணான ஷா பானு வழக்கில், ராஜீவ் காந்தி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, கடைசியாக பாஜக ஆகிய கட்சிகளில் இணைந்துக்கொண்ட அவர், கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பின் எந்த கட்சியும் சாராமல் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.