கோதுமை மாவினை விற்பனை செய்ய நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த மாற்றம் இடம்பெறுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. எனினும், பாவனையாளர் விவகார அதிகார சபையின் அனுமதியின்றியே விலை அதிகரிக்கப்பட்டது.
அத்தியவசியப் பொருளாக கோதுமை மா, பெயரிடப்பட்டதன் பின்னர் தமது அனுமதியின்றி அதன் விலையை அதிகரிக்க முடியாது. இதன் பிரகாரம், தொடர்ந்தும் கோதுமை மா ஒரு கிலோ கிராம் 87 ரூபாய்க்கே விற்பனை செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் தமது அனுதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் பாவனையாளர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.