உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் வெற்றிடத்திற்கு எச்.எம்.டி.பி. ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் குறித்து இன்று (திங்கட்கிழமை) வர்த்தமானி வெளியாகியுள்ளது.
கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க கடந்த மாதம் 5 ஆம் திகதி காலமானார்.
இதனை அடுத்து இந்த வெற்றிடத்திற்கு தான் நியமிக்கப்பட்ட வேண்டும் என்பதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஷாந்த பண்டார 7 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.