வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதலீடு செய்வது குறித்தும், வர்த்தக வாய்ப்புக்களை அடையாளம் காண்பது தொடர்பாகவும் பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் முதன் முறையான பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
பிரிட்டன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தக சமூகத்தை இலக்காகக் கொண்டு ‘இலங்கையில் காணப்படும் முதலீட்டு, வர்த்த வாய்ப்புக்கள்’ அடங்கிய தரவுக்கோவை அண்மையில் லண்டனில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது.
இந்த வட்ட மேசை பேச்சுவார்த்தையிலேயே இவ்வாறு வர்த்தக ரீதியாக அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது.