வீடுகளைக்கொண்ட 4 மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைச்சரினால் நான்கு மாதிரி கிராம்களும் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அமைச்சரினால் 1 இலட்சம் பெறுமதியான கடன் 25 பேருக்கும், தலா ஒரு இலட்சம் பெறுமதியானதும், நாற்பதினாயிரம் ரூபாய் மானிய அடிப்படையிலுமான கடன் 25 பேருக்கும், 200 பெறுமதியான கடன் 50 பேருக்கும் வழங்கப்பட்டன.
அத்தோடு 120 பேருக்கு 39 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களிற்கு தலா 50 ஆயிரம் பெறுமதியான காசோலைகளும், 60 பயனாளிகளிற்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.