மோசடி செய்தவரை கண்டுபிடிக்க, பீல் பிராந்திய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
32 வயதான வட்சல் கமர் என்பவரை தேடிவருவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறித்த நபர், 5,000 டொலர்களுக்கும் அதிகமான நான்கு மோசடி மற்றும் அஞ்சல் திருட்டு வழக்குகளில் தேடப்படுபவர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் மறு விற்பனை வணிகத்தில் முதலீடு செய்யும், பலரையும் ஊக்கப்படுத்தி, பின்னர் குறித்த பணத்தொகையை அவர் கொள்ளையடித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணத்தை திருப்பித் தருவதாக பலமுறை உறுதியளித்த போதிலும், பாதிக்கப்பட்டவர்களில் எவரும் இதுவரை தங்களது பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.