நிகழ்வு சுமார் 3 மணிநேரத்தின் பின்னர் ஆரம்பமாகியமையால் மக்களில் ஒரு பகுதியினர் வெளியேறினர்.
இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் கிளிநொச்சியில் அமைச்சர் சஜித் கலந்துகொண்ட நிகழ்வுகள் சில ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கலந்துகொள்ளவேண்டிய நிகழ்வு 3 மணிநேரத்தின் பின்னர் ஆரம்பமாகியது.
இதனால் சோர்வடைந்த மக்களில் ஒரு பகுதியினர் மண்டபத்தைவிட்டு வெளியேறினர். இதேவேளை அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் மக்கள் அமர்ந்திருந்த பகுதியும் கடுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதேவேளை குறித் நிகழ்விற்காக தம்மை காலையிலேயே ஏற்றி வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மிக நீண்ட நேரம் ஆகியும் நிகழ்வு ஆரம்பமாகாத நிலையில் தாம் வீடுகளிற்கு செல்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் குறித்த பகுதிக்கு 11 மற்றும் 12 மணியளவில் அழைத்து வரப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு 2 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் 5 மணியளவிலேயே ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.