தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இந்து சமய கலாச்சார திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளுக்கு பங்களிப்பு செய்து வரும் தமிழ் கலைஞர்களுக்கான அரச விருதுக்கு கலை இலக்கியத்திற்கு கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக ஆற்றிய பங்களிப்புக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று முன்தினம் (செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி) திங்கட்கிழமை பி.ப.2.30 மணிக்கு
கொழும்பு தாமரை தடாகம் கலையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற விருது விழாவில்
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் கெளரவ மனோ கணேசன் அவர்களினால்
" கலைச்சுடர்"விருது வழங்கி கெளரவிக்கப்பட்டேன்.