லேண்டர் நிலவில் தரையிறங்கும் கடைசி 15 நிமிடங்களே மிக முக்கியமானது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம் நாளை (சனிக்கிழமை) நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிரங்கவுள்ள நிலையில் குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “உங்கள் கைகளில் திடீரென ஒரு பச்சிளம் குழந்தையை கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த குழந்தையை பத்திரமாக நீங்கள் பிடித்திருக்க தடுமாறுவீர்கள்.
அதுபோலத்தான் சந்திரயான் 2வில் இருக்கும் விக்ரம் லேண்டரும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் தருணத்தில் அங்குமிங்கும் அலைபாயும்.ஆனால், அதை உறுதியாக தரையிறக்க வேண்டும். இது நுணுக்கமானதுதான்.
அதனால்தான் சுற்றிலும் 4 இன்ஜின்களுடன், நடுவிலும் ஓர் இன்ஜினைப் பொருத்தியுள்ளோம். ஆகவே குறித்த இறுதி 15 நிமிடங்களே மிக அவசியமானது எனக் கூறியுள்ளார்.