விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அந்நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றில் முல்லையாக வேண்டும் என நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
அத்தோடு குறித்த தினத்தில், அவன் கார்ட் வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த 7,573 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப் பத்திரிகைகள், பிரதிவாதிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவன் கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி காரணமாக அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.