காணாமல் போன 13 வயது சிறுமியை கண்டுபிடித்துதருமாறு பொலிஸார், பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
எட்ரியன் டோரியன் என்ற குறித்த சிறுமி, கடந்த ஒகஸ்ட் 24ஆம் திகதி காலை 10.30 மணியளவில், நகரின் வடக்கு முனைப் பகுதியில் இறுதியாக தென்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி, அடிக்கடி வின்னிபெக் மற்றும் தாம்சன் இடையே பயணம் செய்வதாக அறியப்படுகிறது.
டோரியன் ஐந்து அடி நான்கு அங்குலம், நடுத்தர நீள சிவப்பு முடி, பழுப்பு நிற கண்கள் மற்றும் கண்ணாடி அணிந்திருப்பால் என விவரிக்கப்படுகிறது.
சிறுமி குறித்து தகவல் தெரிந்தவர்கள், தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.