ஆயுததாரி ஒருவரை உலங்குவானூர்தியின் உதவியுடன், 100 கிலோமீற்றர் துரத்தி டூர்ஹம் பிராந்திய பொலிஸார் பிடித்துள்ளனர்.
கிளெரிங்டன் பகுதி ரன்ட்ல் வீதியில் பிக்கப் ரக வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் வாகனம் அந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அண்மித்த போது, அது அங்கிருந்து வேகமாகத் தப்பித்துச் சென்றதாகவும், அதனை அடுத்து அங்கே உலங்குவானூர்தியும் அழைக்கப்பட்டதாகவும் டூர்ஹம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்பிறகு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், குறித்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இதன்போது, வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் இருந்து .22 கலிபர் றிவோல்வர் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து 49 வயதான ஜோர்ஜ் மக்ஸ்வெல் என்பவரைக் கைது செய்த அதிகாரிகள், அவர் மீது தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.