பகுதியில் நீர் மிதப்பு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 6பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கனேடிய விமானப்படை தெரிவித்துள்ளது
மேல் ராஃப்ட் ஏரி பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விமான விபத்து தொடர்பிலான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அதேவேளை, மேலும் இருவர் உடனடி மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக பரசூட் மூலம் சம்பவ இடத்தில் தரையிறங்கியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட 6 பேரும் சிகிச்சைகளுக்காக முஸ்கோகா விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இநத மீட்பு நடவடிக்கைக்காக விமானப்படை உலங்குவானூர்தி ஒன்றும் விமானம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.