பண்டாரவெல நகர சபை மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஒரு மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் எதிர்கால தலைமுறைக்காகவே போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது என கூறினார்.
அத்தோடு போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் செயல்முறைக்கு எதிரான அனைத்து நபர்களும், ஒரு சிறந்த நாட்டைக் கட்டும் நடவடிக்கைக்கு எதிரானவர்கள் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற அனைத்து கடுமையான குற்றச் செயல்களுக்கும் காரணம் போதைப்பொருள் தான் காரணம் என ஜனாதிபதி மைத்திரி தெரிவித்தார்.
எனவே எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.
அத்தோடு, முன்னேற்றமடைந்த நாடு என்பது பௌதீக வளங்களால் மட்டும் அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக அன்றி, ஒழுக்கப் பண்பாடுகளைக்கொண்ட சிறந்த மனிதர்கள் வாழும் சிறந்ததோர் நாடாகும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.