பெயர் பதிவு, பெரும்பாலும் மாத இறுதியிலேயே பதிவு செய்யப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் பதிவேட்டில் இல்லை என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் “குடியுரிமையை கைவிடுவது என்பது ஒரு நிர்வாக செயன்முறை ஆகும். அதன் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பிரகாரமே குடியுரிமையை கைவிட வேண்டும்” என கூறினார்.
இதேவேளை எவ்வாறாயினும், தனது நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30 வரையான காலப்பகுதியில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பெயர் பட்டியலை கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தனது அமெரிக்க குடியுரிமை துறப்பு ஆவணம், மே 3ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டதாகவும் ஏப்ரல் 17ஆம் திகதியிலிருந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவராக கணிக்கப்படமாட்டார் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார். இந்த ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் பதிவாளர் வெளியிட்ட முதலாவது காலாண்டில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என கடந்த வாரம் பல சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.