லாசல்லே பகுதியில் உள்ள கஞ்சா விற்பனை நிலையத்திற்கு முன்பாக, சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எசெக்ஸ் கவுண்டி ஒன்ராறியோ மாகாண பொலிஸ், மாகாண கூட்டுப் படைகள் கஞ்சா அமுலாக்கக் குழு, சமூக வீதி குற்றப் பிரிவு மற்றும் லாசாலே பொலிஸ் படை உறுப்பினர்களின் துணையுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சாவை உட்செலுத்தக் கூடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும், கஞ்சா விற்பனை நோக்கத்திற்காக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.