அலரிமளிக்கலியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
சிலரின் தேவைக்கேற்ப கோதுமை மா மற்றும் பால்மா விலை தன்னிச்சையாக அதிகரிக்கப்படும் ஒரு கலாச்சாரம் இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், உலக சந்தையில் விலைகள் குறையும் போது, இலங்கையிலும் கோதுமை மா மற்றும் பால்மாவின் விலை குறையும் என்றும் அவர் கூறினார்.
எரிபொருள் விலை சூத்திரம் குறித்து ஆரம்பத்தில் அனைவருக்கும் சந்தேகம் இருந்தது போதும் பின்னர் அதனை மக்கள் எளிதாக புரிந்துகொண்டதைப்போலவே இந்த விலை சூத்திரமும் அமையும் என்றும் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.