இதுதொடர்பான தகவல்களை கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இன்று(புதன் கிழமை) வெளியிட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான திருத்த சட்ட வரைபில் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டுள்ள ஒருவரின் வேட்புமனுவையும் நிராகரிக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன்னரே ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் முக்கியமான திருத்த வரைவு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் ரணில் விக்ரமசிங்க வேண்டுமென்றே ஜனாதிபதி குறித்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்ற காரணத்தை வெளிப்படுத்தி கால இழுத்தடிப்பு செய்து வந்துள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் பெரிதாகி ஜனாதிபதியின் கவனத்திற்கு வந்தபோது, அமைச்சர்கள் முன்னிலையில் குறித்த சட்ட வரைபை அமைச்சரவை முன்கொண்டு வந்து விரைவில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இதனை தாமதப்படுத்தும் நோக்கியில் பிரதமர் இந்த திருத்தங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிப்பதாகவும் கூறினார்.
இதன்பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், மீண்டும் அதனை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. இருப்பினும் பிரதமர் சில காரணங்களை கூறி ஒவ்வொரு முயற்சியையும் தடுத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது கோட்டபாய ராஜபக்ஷவை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான நகர்வாக இருக்கலாம் என்று தற்போது சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.