அத்துடன், கட்சியின் மத்திய செயற்குழு சஜித்துக்கு அனுமதி வழங்கவே இல்லை எனவும் தமது வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் ரவி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உள்நாட்டையும் வெளிநாட்டையும் அரசியல் சாணக்கியத்தால் சமாளிக்கக்கூடிய ஒருவரைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தலைமைத்துவத்தைத் தான் ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டையில் நேற்று உரையாற்றும்போது பகிரங்கமாக அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தனிநபரின் சில்லறைத்தனமான விளையாட்டுக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எடுபடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், குடும்ப ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை எனவும் கூறியுள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல் ஓரிரு ஆதரவாளர்களை மட்டும் கொண்டுள்ளவர்கள் ஜனாதிபதிக் கதிரையில் அமர்வதற்குக் கனவு காணக்கூடாது என்றும் அவ