அவ்வாறு கடற்படை பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய கடற்படை வீரர் ஒருவர் ’வரவேற்பு நிகழ்ச்சியில்’ தன்னை வரவேற்க வந்த காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
HMCS Toronto என்னும் கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தை சென்றடைந்த போது, ஆறு மாதங்களுக்குப் பின் திரும்பும் தங்கள் உறவினர்களை வரவேற்க ஒரு கூட்டம் கூடியிருந்தது.
அவர்களில் தனது காதலர் டியூரெட்டுக்காக காத்திருந்த அலெக்சாண்ட்ராவும் ஒருவர். ஆனால் கூட்டத்தில் ஒருவராக இருந்தாலும், தான் அன்றைய கதாநாயகி என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
கப்பலிலிருந்து இறங்கும் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அலெக்சாண்ட்ராவின் முகம், தனது காதலர் டியூரெட்டைக் கண்டதும் மலர்கிறது.
தன் காதலியை நோக்கி வந்த டியூரெட்டும் அவரை கட்டித் தழுவிக் கொள்கின்றார். ஆனால், அவர் அடுத்து செய்யப் போகும் காரியத்தை அலெக்சாண்ட்ரா எதிர்பார்க்கவில்லை.
தனது தொப்பியைக் கழற்றிய டியூரெட், அலெக்சாண்ட்ரா முன் முழங்காலிட்டு தனது கையில் தயாராக வைத்திருந்த மோதிரத்தை (முதலில் கீழே தவறவிட்டார் என்றாலும்) டியூரெட் நீட்டி, என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க, கண்ணீருடன் ஒப்புக் கொள்கிறார் அலெக்சாண்ட்ரா.
தாங்கள் காதலிப்பது உண்மைதான் என்றாலும், இந்தமுறை விடுமுறையில் வருபோது அவர் திருமணத்திற்கு அனுமதி கோருவார் என்று எதிர்பார்க்கவில்லையென ஆனந்தக் கண்ணீருடம் கூறினார்.
அங்கு கூடியிருந்த அத்தனை பேரும், தங்கள் உறவினர்களை வரவேற்க வந்திருக்கிறோம் என்பதை மறந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தம்பதியை உற்சாகப்படுத்தியமை சிறப்பம்சமாகும்.