இதுவரையில் தபால் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் அதிகளவிலானவை கடந்த மாதத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்படும் ‘போதைப்பொருள் அற்ற நாடு’ வேலைத் திட்டத்திற்கு தபால் திணைக்களத்தினால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகின்றோம்.
அண்மைய காலங்களில் தபால் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது. போதை மாத்திரைகளே இவ்வாறு அதிகளவில் கைப்பற்றப்பட்டிருந்தன.
வெளிநாடுகளிலிருந்து தபால் மூலம் நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களும் சுங்கப் பரிசோதனைகளுக்கு பின்னர் மத்திய தபால் நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக நான்கு அதி நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக சோதனைக்கு உட்படுத்தப்படும் பொதிகள் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் அவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் உதவியுடன் சோதனைக்கு உட்படுத்தப்படும். அந்த விசேட நடவடிக்கைக்காக போதைப்பொருள் சோதனை குறித்து பயிற்சி பெற்ற பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படும்.
சந்தேகத்திற்கிடமான பொதிகளில் போதைப்பொருள் காணப்படும் பட்சத்தில் அவை சுங்கத் திணைக்களத்திடம் கையளிக்கப்படுவதுடன், அது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.