மக்களின் நலன்கருதி நேற்றிரவு மற்றும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை வேளைகளில் சுமார் 50 பேருந்துகள் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது காலாவதியாகிய வாகன ஓட்டுநர் அனுமதிப் பத்திரம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப் பத்திரங்கள் இல்லாத வாகனங்கள், வாகன நடத்துனருக்கான அடையாள அட்டை இல்லாத பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
ஏ-9 வீதியில் அதிகளவில் இடம்பெறும் விபத்துக்களைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு செயற்பாடாகவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்தடவையாக இடம்பெற்ற இந்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது 60 வீதமான பேருந்துகளின் உரிமையாளர்கள் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீதிப் போக்குவரத்து விதிமுறைக்கு ஏற்றவையாக இல்லாத பேருந்துகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டமையும் இனங்காணப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து வட. மாகாணத்தில் தொடர்ந்தும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பயணிகள் தங்கள் பிரயாணத்தின்போது தாம் பயணிக்கும் பேருந்துகள் அனுமதிப் பத்திரங்கள் கொண்டுள்ளனவா என்பது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.