சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியாவின் சாமிமலை சின்ன சோலங்கந்தை பகுதியில் உள்ள நீரோடையிலிருந்து குறித்த சடலம் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.
நீரோடையில் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை அகற்றினர்.
40 வயது மதிக்கத்தக்க குறித்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின்னர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சடலம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸாரும், ஹற்றன் பொலிஸ் நிலைய கைரேகைப் பிரிவினரும் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.