வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வவுனியா வடக்கு வெடுக்குநாறி மதலையில் சிவனை வழங்கச்செல்லும் வழியில் படிகள் அமைப்பதற்கு அனுமதி கோரி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது வனவளத் திணைக்களத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர், குறித்த படிக்கட்டுகளை அமைப்பதற்கு பொலிஸார் மூலம் தொடர்ந்தும் தடை விதித்து வருவதாகவும் இதனால் படிக்கட்டுகளை அமைக்க முடியாதுள்ளது எனவும் தெரிவித்ததுடன், தற்போது கயிற்றின் உதவியுடனேயே மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதேச செயலாளர் மாகாண சபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டே படிகள் செய்யப்பட்டுள்ளதால் அதனை அமைக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து அபிருத்திகுழுவில் முடிவெடுப்பதாகவும் அரசாங்க அதிபர் உடனடியாக கலாசார அமைச்சருக்கு கடிதம் மூலம் குறித்த சம்பவத்தை அறியப்படுத்தவேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டு அதன் நிமிர்த்தம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசாவை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசியல் அமைப்பு போல் அதற்கும் காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
உடனடியாக பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, “அவ்வாறு கூறவேண்டாம் நீங்கள் எதை கூறவருகின்றீர்கள் என்பது எமக்கு தெரியும். எனவே விடயத்திற்கு வாருங்கள். இப்போது அரசியலமைப்பு பற்றி கதைக்க தேவையில்லை” என தெரிவித்தார்.