இவ்வாறு அமைந்தால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவில் முடித்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ்ர தெரிவிக்கையில், “கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவர் பெற்ற வெற்றி செல்லாது என அப்போது உச்ச நீதிமன்றில் தொடரப்பட்டு வழக்கு 2014, 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரும் நிலுவையில் இருக்கும் நிலையுள்ளது.
இதுபோன்ற வழக்குகள் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக நாம் அனைவரும் மீள்பார்வை செய்து தீர்வு காண வேண்டும்.
மத்திய நிலைக்குழு பரிந்துரைத்ததைப்போல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நாட்டின் தெற்கு, மேற்கு மற்றுக் கிழக்கு பகுதிகளில் உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைக்கவேண்டும். அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளை விசாரிக்கத் தனி அமர்வும், மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிப்பதற்கென தனி அமர்வுகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதன் முதல் தொடக்கமாக சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்கப்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார்.