குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் உடனடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் பின்னரான ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் பிரகாரம் இலங்கை மற்றும் அண்மைய நாடுகளில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாகவும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து தாம் சர்வதேச வானிலை மையங்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மக்களுக்கு ஆரம்ப அறிவித்தலை வழங்குவதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா இதுவரை எந்தவித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.