குறிப்பாக கனடாவின் அல்பேர்டா உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக அப்பகுதியிலுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் கடும் காற்று வீசி வருகின்றமை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக கனடா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பமான வானிலை நிலவி வந்த நிலையில் தற்போது கனடாவில் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.