உற்பத்தியின் கீழ் செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலை அறுவடை நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள பிரமந்தனாறு பகுதியில் இடம்பெற்றது.
இந்த திட்டத்தில் மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட நிலக்கடலை அறுவடை செய்யும் நிகழ்வாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டதுடன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிமனைப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த தேசிய வேலைத் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுவதுடன் நிலக்கடலை, உருளைக் கிழங்கு உள்ளிட்ட பிரதேசத்திற்கு ஏற்ற உணவு உற்பத்திப் பொருட்கள் மானியமாக வழங்கப்பட்டு விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது