சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் வெயில் வானிலை காணப்பட்ட நிலையில் மாலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
அத்துடன், அசோக் நகர் சிட்லப்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், பல்லாவரம், எழும்பூர், அண்ணாசாலை, காட்டுப்பாக்கம் என பல்வேறு இடங்களில் இடி முழக்கத்துடன் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடும் வெயில் மற்றும் வறட்சி காரணமாக மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் குடிநீர்த் தட்டுப்பட்டையும் எதிர்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இன்றைய மழை வீழ்ச்சி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.